உபதேச உண்மை - எழுத்து பிரித்த வடிவில்
உபதேச உண்மை
திருச்சிற்றம்பலம்
கண்ணே கண்மணியே
கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விண்ணிறைவே
சிவமே தனி மெய்ப்பொருளே
தண்ணேர்
ஒண் மதியே
எனைத் தந்த தயாநிதியே
உண்ணேர் உள் ஒளியே
எனக்கு உண்மை உரைத்தருளே
வளியே வெண்ணெருப்பே
குளிர் மாமதியே
கனலே வெளியே மெய்ப்பொருளே
பொருள் மேவிய மேனிலையே
அளியே அற்புதமே
அமுதே அறிவே அரசே
ஒளியே உத்தமனே
எனக்கு உண்மை உரைத்தருளே
அன்பே என்னரசே
திரு அம்பலத்து ஆர் அமுதே
என்பே உள்ளுருகக்
கலந்து என்னுள் இருந்தவனே
இன்பே என்னறிவே
பரமே சிவமே யெனவே
உன் பேர் ஓதுகின்றேன்
எனக்கு உண்மை உரைத்தருளே.
தனையா வென்று
அழைத்தே
அருட் சத்தி அளித்தவனே
அணையை அப்பனுமாய்
எனக்கு காரியம்
ஆனவனே
இனையாத
என்னையும்
மேல் நிலை ஏற்றுவித்து
ஆண்டவனே
உனையான்
ஏத்துகின்றேன்
எனக்கு உண்மை உரைத்தருளே.
துப்பார் செஞ்சுடரே
அருட்சோதி சுகக்கடலே
அப்பா என்னரசே
திரு அம்பலத்து ஆர் அமுதே
இப்பாரிற் பசிக்கே தந்த
இன்சுவை நல் உணவே
ஒப்பாய் ஒப்பரியாய்
எனக்குண்மை உரைத்தருளே.
என்றே என் உள் உறும் சுடரே
எனை ஈன்றவனே
நன்றே நண்பெனக்கே மிக நல்கிய நாயகனே
மன்றேர் மாமணியே
சுக வாழ்க்கையின் மெய்ப் பொருளே
ஒன்றே என் துணையே
எனக்கு உண்மை உரைத்தருளே.
திருவே தெள்ளமுதே
அருட்சித்த சிகாமணியே
கரு வேர் அற்றிடவே
களைகின்ற வென்கண்ணுதலே
மருவே மாமலரே
மலர் வாழ்கின்ற வானவனாம்
உருவே
என் குருவே
எனக்கு உண்மை உரைத்தருளே.
தடை யாவுந் தவிர்த்தே
எனைத் தாங்கிக் கொண்டு ஆண்டவனே
அடையா அன்பிலர் பால்
எனக்கு அன்போடு தந்த பெருங் கொடையாய் குற்றமெலாங் குணங் கொண்ட குணக் குன்றமே உடையாய்
உத்தமனே
எனக்கு உண்மை உரைத்தருளே.
பெண்ணாய் ஆணுருவாய்
எனைப் பெற்ற பெருந் தகையே
அண்ணா என்னரசே
திரு அம்பலத்தில் ஆடுகின்றோய்
எண்ணா நாயடியேன்
களித் திட்ட உணவையெலாம்
உண்ணாது உண்டவனே
எனக்கு உண்மை உரைத்தருளே.
நந் நாலுங் கடந்தே
ஒளிர் ஞான சபா பதியே
பொன்னாருஞ் சபையாய்
அருட் பூரண புண்ணியனே
என்னால் ஆவது ஒன்றும் உனக்கு இல்லை
எனினும் எந்தாய் உன்னால் வாழுகின்றேன்
எனக்கு உண்மை
உரைத்தருளே.
திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment