திருக்கதவந் திறத்தல் - எழுத்து பிரித்த வடிவில்
திருசிற்றம்பலம்
திருக்கதவம் திறவாயோ
திரைகளெலாம் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்சோதித்
திரு உருக் காட்டாயோ
உருக்கி அமுதம் ஊறி எடுத்து
உடம்பு உயிரோடு உளமும்
ஒளிமயமே ஆக்குற
மெய் உணர்ச்சி அருளாயோ
கருக்கருதாத்த தனி வடிவோய்
நின்னை என்னுட் கலந்தே
கங்குல் பகல் இன்றி
என்றும் களித்திடச் செய்யாயோ
செருகருத்தாதவருக்கு அருளும் சித்தி புரத்தரசே
சித்தசிகாமணியே
என் திரு நட நாயகனே.
மணிக்கதவம் திறவாயோ
மறைப்பையெலாம் தவிர்த்தே
மாற்றறியாப் பொன்னே
நின் வடிவது காட்டாயோ
கணிக்கறியாப் பெரு நிலையில்
என்னொடு நீ கலந்தே
கரை கடந்த பெரும் போகம்
கண்டிடச் செய்யாயோ
தணிக்கறியாக் காதல்மிகப்
பெருகுகின்றது அரசே
தாங்க முடியாது இனி
என் தனித் தலைமைப் பதியே
திணிக் கலை ஆதிய எல்லாம்
பணிக்கவல்ல சிவமே
சித்தசிகாமணியே என் திரு நட நாயகனே.
உரை கடந்த திரு வருட்
பேரொளி வடிவைக் கலந்தே
உவட்டாத பெரும் போகம்
ஓங்கியுறும் பொருட்டே
இரை கடந்து என் உள் அகத்தே
எழுந்து பொங்கித் ததும்பி
என் காதல் பெரு வெள்ளம்
என்னை முற்றும் விழுங்கிக்
கரை கடந்து போனது இனி
தாங்க முடியாது
கண்டு கொள்வாய் நீயே
என் கருத்தின் வண்ணம் அரசே
திரை கடந்த குருமணியே
சிவஞான மணியே
சித்தசிகா மணியே
என் திரு நட நாயகனே.
உன்புடை நான் பிறர் போலே
உடுக்க விழைந்தேனோ
உண்ண விழைந்தேனோ
வேறுடைமை விழைந் தேனோ
அன்பு உடையாய் என்றனை
நீ அணைந்திடவே விழைந்தேன்
அந்தோ என் ஆசை வெள்ளம்
அணைகடந்து பெருகுகின்றது அரசே
என்புடை வந்தணைக என
இயம்புகின்றேன் உலகோர்
என் சொலினும் சொல்லுக
என் இலச்சை எலாம் ஒழித்தேன்
தென் புடையோர் முக நோக்கித்
திருப்
பொது நிற் கின்றோய்
சித்தசிகா
மணியே என் திரு நட நாயகனே.
இறந்து இறந்தே
இளைத்ததெலாம் போதும்
இந்த உடம்பே இயற்கை உடம்பாக
அருள் இன்னமுதம் அளித்து
என் புறந் தழுவி
அகம் புணர்ந்தே கலந்து கொண்டு
எந்நாளும் பூரணமாம்
சிவபோகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந் இறந்து போய்க் கதியைப்
பெற நினைந்து ஏமாந்த பேதையர் போல்
எனை நினையேல்
பெரிய திருக்கதவம் திறந்து
அருளி அணைந்திடுவாய்
சிற்சபை வாழ் அரசே
சித்தசிகாமணியே என் திருநட
நாயகனே.
பொய்யுடையார் விழைகின்ற
புணர்ச்சி விழைந்தேனோ
பூணவிழைந்தேனோ
வான் காண விழைந்தேனோ
மெய் உடையாய் என்னொடு நீ
விளையாட விழைந்தேன்
விளையாட்டு என்பது
ஞானம் விளையும் விளையாட்டே
பையுடை பாம்பு
அனையரொடும் ஆடுகின்றோய்
எனது பண்பறிந்தே
நண்புவைத்த பண்புடையோய்
இன்னே செய்யுடை
என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய்
சித்தசிகா மணியே என் திரு நட நாயகனே.
கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம்
பிடித்துக் கூவுகின்றார்
பலன் ஒன்றும் கொண்டறியார்
வீணே நீறுகின்றார்
மண்ணாகி நாறுகின்றார்
அவர்போல் நீடுலகில்
அழிந்துவிட நினைத்தேனோ
நிலைமேல் ஏறுகின்ற
திறம்விழைந்தேன்
ஏற்றுவித்தாய் அங்கே
இலங்கு திருக் கதவு திறந்து
இன்ன அமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ் ஞான
சித்தி உறப் புரிவாய்
சித்தசிகா மணியே என் திரு நட நாயகனே.
நெறிபவுராணங்கள்
விளம்பு நெறி இதிகாசம்
விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும்
உளவனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி
உணர உரைத்தனையே
ஏதமற உணர்ந்தனன்
வீண் போது கழிப்பதற்கு
ஒரு எள்ளு அளவும்
எண்ணம் இலேன்
என்னொடு நீ புணர்ந்தே
தீது அறவே
அனைத்தும் வல்ல
சித்தாடல் புரிவாய்
சித்தசிகா
மணியே என் திரு நட நாயகனே.
கலையுரைத்த கற்பனையே
நிலை எனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கம் எலாம்
மண் மூடிப் போக
மலை வறு சன் மார்க்கம் ஒன்றே
நிலை பெற மெய் உலகம்
வாழ்ந்து ஓங்க கருதி
அருள் வழங்கினை என் தனக்கே
உலை வறும் இப்பொழுதே
நல் தருணம் என நீயே உணர்த்தினை
வந்து அணைந்து அருள் வாய்
உண்மை உரைத் தவனே
சிலை நிகர் வன் மனம் கரைத்துத்
திருவமுதம் அளித்தோய்
சித்தசிகா மணியே என் திரு நட நாயகனே.
திருக்கதவம்
திறந்தே
திருவருட்
பேரொளி காட்டித்
திரு
அமுதம் ஊட்டிக்
கருத்து
மகிழ்ந்து
என்
உடம்பில் கலந்து உளத்தில் கலந்து
கனிந்த
உயிரில் கலந்து அறிவிற் கலந்து
உலகம்
அனைத்தும் உருத்தகவே அடங்குகின்ற
ஊழி
தொறும் பிரியாத ஒன்றாகி
காலவரை
உரைப்ப எலாம் கடந்தே
திருத்தியொடு
விளங்கி
அருள்
ஆடல் செய வேண்டும்
சித்த
சிகாமணியே என் திரு நட நாயகனே.
திருசிற்றம்பலம்
Reference: https://www.thiruarutpa.org/thirumurai/v/T263/tm/thirukkathavan-_thiraththal
Key take away: Prayers to request to GOD to remove all obstacles so that we can see and feel him, get his blessing to attain light body, to be joined with us forever
Comments
Post a Comment