உபதேச உண்மை - எழுத்து பிரித்த வடிவில்
உபதேச உண்மை திருச்சிற்றம்பலம் கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே விண்ணே விண்ணிறைவே சிவமே தனி மெய்ப்பொருளே தண்ணேர் ஒண் மதியே எனைத் தந்த தயாநிதியே உண்ணேர் உள் ஒளியே எனக்கு உ ண்மை உரைத்தருளே வளியே வெண்ணெருப்பே குளிர் மாமதியே கனலே வெளியே மெய்ப்பொருளே பொருள் மேவிய மேனிலையே அளியே அற்புதமே அமுதே அறிவே அரசே ஒளியே உத்தமனே எனக்கு உ ண்மை உரைத்தருளே அன்பே என்னரசே திரு அம்பலத்து ஆர் அமுதே என்பே உள்ளுருகக் கலந்து என்னுள் இருந்தவனே இன்பே என்னறிவே பரமே சிவமே யெனவே உன் பேர் ஓதுகின்றேன் எனக்கு உ ண்மை உரைத்தருளே. தனையா வென்று அழைத்தே அருட் சத்தி அளித்தவனே அணையை அப்பனுமாய் எனக்கு காரியம் ஆனவனே இனையாத என்னையும் மேல் நிலை ஏற்றுவித்து ஆண்டவனே உனையான் ஏத்துகின்றேன் எனக்கு உ ண்மை உரைத்தருளே. துப்பார் செஞ்சுடரே அருட்சோதி சுகக்கடலே அப்பா என்னரசே திரு அம்பலத்து ஆர் அமுதே இப்பாரிற் பசிக்கே தந்த இ...