திருக்கதவந் திறத்தல் - எழுத்து பிரித்த வடிவில்
திருசிற்றம்பலம் திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திரு உருக் காட்டாயோ உருக்கி அமுதம் ஊறி எடுத்து உடம்பு உயிரோடு உளமும் ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ கருக்கருதாத்த தனி வடிவோய் நின்னை என்னுட் கலந்தே கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய்யாயோ செருகருத்தாதவருக்கு அருளும் சித்தி புரத்தரசே சித்தசிகாமணியே என் திரு நட நாயகனே. மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே மாற்றறியாப் பொன்னே நின் வடிவது காட்டாயோ கணிக்கறியாப் பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே கரை கடந்த பெரும் போகம் கண்டிடச் செய்யாயோ தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்றது அரசே தாங்க முடியாது இனி என் தனித் தலைமைப் பதியே திணிக் கலை ஆதிய எல்லாம் பணிக்கவல்ல சிவமே சித்தசிகாமணியே என் திரு நட நாயகனே. உரை கடந்த திரு வருட் பேரொளி வடிவைக் கலந்தே உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் ப...